Scan Mobiles-Apps

Scan to Download Google AppDownload Android AppScan to Download Apple App

Quote of the Day

பழமொழி

"பணத்தைப் பார்க்கிறதா பழமையைப் பார்க்கிறதா?"

Sign up


By signing up, you agree to the Terms of Service and Privacy Policy.
முயற்சிப்போமா?
  • 31
Added article  
12 வயதில் பள்ளியில் படிக்கும் போது தீவிர சிவாஜி ரசிகையாக இருந்த நடிகை பிரமிளா அதன்பின் 14 வது வயதில் சினிமாவில் அறிமுகமாகி ஒரு கட்டத்தில் சினிமாவே வேண்டாம் என்று வெறுத்து போய் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.நடிகை பிரமிளா 12 வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது சிவாஜி கணேசன் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வந்தால் அவற்றை வெட்டி தனது நோட்புக்கில் வைத்திருப்பாராம். ஒரு கட்டத்தில் டீச்சர் அதனை பார்த்து விட அவரை பள்ளியில் இருந்து விரட்டி விட்டதாக கூறப்பட்டது.இந்த நிலையில் தான் அவர் சென்னைக்கு ஒரு திருமணத்திற்காக குடும்பத்தோடு வந்த போது திரைப்பட வாய்ப்பை பெற்றார். முதல் படம் கேஎஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான வாழையடி வாழை. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாவது படமாக கே. பாலசந்தர் இயக்கத்தில் உருவாகும் அரங்கேற்றம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.ஆனால் இந்த படத்தில் அவருக்கு ஒரு பாலியல் தொழிலாளி வேடம் என்றபோது அவரது பெற்றோர் தயங்கினார்கள். ஆனால் இந்த படத்தின் மூலம் உங்கள் மகள் நிச்சயம் மிகப்பெரிய புகழை பெறுவார், நடிப்புக்காக அவருக்கு பாராட்டு கிடைக்கும் என்று பாலச்சந்தர் உறுதி அளித்ததை தொடர்ந்து அந்த படத்தில் நடிக்க அனுமதித்தனர்.பாலச்சந்தர் கூறியபடி அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் பிரமிளாவுக்கு வாய்ப்புகளும் குவிந்தன. கோமாதா என் குலமாதா, மனிதரில் மாணிக்கம், தங்கப்பதக்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பள்ளிக்காலத்தில் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகையாக இருந்த பிரமிளா தங்கப்பதக்கம் திரைப்படத்தில் அவருடைய மருமகளாக நடித்தார்.அதன் பின்னர் பருவ காலம், உன்னை சுற்றும் உலகம், சதுரங்கம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் தான் கஷ்டப்பட்டு சினிமாவில் சம்பாதித்த பணத்தை தன்னுடைய தந்தை தொழில் தொடங்குவதற்காக கொடுத்தார். ஆனால் அவருடைய தந்தை ஆரம்பித்த தொழில் நஷ்டத்தில் முடிந்தது. மகளின் பணத்தை நாம் நஷ்டம் ஆக்கிவிட்டோமே என்று மன உளைச்சல் காரணமாகவே அவரது தந்தை மறைந்து விட்டார்.அதனையடுத்து அவரது தாயார் புதிய தொழில் தொடங்கவும் பிரமிளா பணம் கொடுத்தார். அவருடைய தாயார் தொடங்கிய சுற்றுலா கம்பெனி நிறுவனமும் நஷ்டத்தில் முடிந்தது. தான் சம்பாதித்த 90% பணத்தை அப்பா அம்மாவுக்காகவே கொடுத்து அவர்கள் நஷ்டம் அடைந்ததால் ஒரு கட்டத்தில் பிரமிளா விரக்தி அடைந்தார்.இந்த நிலையில் தான் அவர் ஜட்ஜ்மெண்ட் என்ற திரைப்படத்தை தயாரித்தார். தன்னிடம் மீதமுள்ள பணத்தை வைத்து கடன் வாங்கி இந்த படத்தை தயாரித்துக் கொண்டிருந்த நிலையில்தான் பிரமிளா மிகவும் பொருளாதார கஷ்டத்தில் இருப்பதை அறிந்த அமெரிக்காவில் இருந்த அவருடைய அண்ணன் தன்னுடன் அமெரிக்கா வந்துவிடுமாறு அழைத்துள்ளார்.என்னுடன் அமெரிக்காவுக்கு வா, உனக்கு அமெரிக்காவில் ஒரு நல்ல வழியை காண்பிக்கிறேன் என்று அழைத்தார். இதனை அடுத்து அண்ணனின் பேச்சை கேட்டு கொண்ட பிரமிளா இனிமேல் சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்து தான் தயாரித்த ஜட்ஜ்மெண்ட் என்ற படத்தை அப்படியே இயக்குனரிடம் கொடுத்துவிட்டு தனக்கு ஒரு பைசா கூட வேண்டாம். நீங்களே இந்த படத்தை முடித்துவிட்டு ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அண்ணனுடன் அமெரிக்கா சென்றுவிட்டார்.அதன் பிறகு அமெரிக்காவில் தொழிலதிபர் பால் என்பவரை அவர் திருமணம் செய்து கொண்டு கலிபோர்னியாவில் செட்டில் ஆகிவிட்டார். அமெரிக்காவில் பிரமிளா கணவர் தொழிலை பார்த்து கொண்டு, அவருக்கு உதவியாக தொழில் சம்பந்தப்பட்ட பணிகளை கவனித்து கொண்டு வருகிறார். சினிமாவில் மீண்டும் தலைகாட்ட மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார்.தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கிட்டத்தட்ட 250 படங்களில் நடித்த நடிகை பிரமிளா சினிமாவிலிருந்து சம்பாதித்த ஒரு காசை கூட அவர் அமெரிக்காவுக்கு எடுத்துச் செல்லவில்லை. ஆனால் இன்று அவர் அமெரிக்காவில் ஒரு பிரபல தொழிலதிபரின் மனைவியாக பணக்கார வீட்டு மருமகளாக இருக்கிறார். திரையுலகம் எத்தனையோ பேரை வாழ வைத்திருந்தாலும் பிரமிளா போன்ற சிலரை வீழ்த்தி உள்ளது.
  • 31
Added a news  
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதானி மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.அந்தக் குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.சமூகத்தில் பெரிதும் பேசப்பட்ட தற்போதைய விசா நெருக்கடி தொடர்பான விசாரணைகளுக்காகவே இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 36
Added a news  
நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை இரண்டு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் காலவகாசம் வழங்கியுள்ளது.ஊவா மாகாண ஆளுநர் மொஹமட் முஸம்மிலின் மகன் தாக்கல் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
  • 35
Added a news  
அரசாங்க வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 3000 தாதியர்களை புதிதாக இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
  • 42
Added a news  
சமூக ஊடகங்களில் காணொளிகளை வெளியிட்டு தம்மை அவமானப்படுத்துவதை நிறுத்துமாறு கோரி இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (7) தனிப்பட்ட வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார்.2024 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் பாதுகாப்பு தொடர்பான சட்டத்தின் பிரிவு 24 இன் படி இந்த வழக்கை அவர் தாக்கல் செய்துள்ளார்.இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே வாதியாகவும், இந்த தனிப்பட்ட வழக்கின் பிரதிவாதிகளான துஷார சாலிய ரணவக்க என்ற மிட்செல் ரணவக்க மற்றும் இணைய யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனம் பிரதிவாதிகளாகவும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.இது தொடர்பான தனிப்பட்ட வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.
  • 43
Added article  
தற்கொலை முயற்சியில் ஈடுபடலாமா என்று யோசிக்கும் அளவுக்கு மனச்சோர்வின் உச்சத்திலிருந்த இயக்குநர் மனோபாலாவை புதிய உற்சாகத்துடன் இயங்க வைத்த படம் 'பிள்ளை நிலா' . மனோபாலா இயக்கிய முதல் திரைப்படமான ‘ஆகாய கங்கை’ தோல்வியடைந்தது. நடிகர் மோகன் வாய்ப்பு தேடி அலைந்த காலகட்டத்தில் அவருக்கு மிக உதவியாக இருந்தவர் மனோபாலா. அந்த நட்பு காரணமாக மோகன் வாய்ப்பு தர, மனோபாலா அடுத்து இயக்கிய ‘நான் உங்கள் ரசிகன்’ படமும் தோல்வியை அடைந்தது. பாரதிராஜாவிடம் பல திரைப்படங்களில் உதவியாளராக இருந்து மிகுந்த அனுபவம் பெற்றவரான மனோபாலா, தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் மனச்சோர்விற்கு ஆளானார். ‘தற்கொலை செய்து கொள்ளலாமா?’ என்னும் அளவிற்கு அவரது சோர்வு அமைந்தது. இந்த நிலையில் கலைமணியின் மூலம் ‘முதல் வசந்தம்’ திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், 'மணிவண்ணன் இயக்கினால்தான் நன்றாக இருக்கும்’ என்று இதர தயாரிப்பாளர்கள் கருதியதால் அந்த வாய்ப்பும் பறிபோனது.சோர்வின் உச்சிக்கே சென்ற மனோபாலாவை, கண்ணதாசன் எழுதிய ‘கால மகள் கண் திறப்பாள் சின்னையா’... என்கிற திரையிசைப்பாடல்தான் ஆற்றுப்படுத்தியது. திருச்சி வெக்காளி அம்மனிடம் மிக உருக்கமாகக் கடிதம் எழுதி வேண்டுகோள் வைத்தார் மனோபாலா. அந்த பிரார்த்தனை வீண் போகவில்லை. மீண்டும் அழைத்த கலைமணி, “மோகன் கால்ஷீட் தரேன்னு சொல்லிட்டாரு. ஆனா டைரக்ஷன் நீதான் செய்யணும்னு கண்டிஷனா சொல்லிட்டாரு” என்று சொல்ல, மனோபாலாவிற்கு ஆனந்தக் கண்ணீர். வாய்ப்பு தேடிய காலத்தில் தனக்குப் பல்வேறு விதங்களில் உதவி செய்த மனோபாலாவை மறக்காமல் ஆதரிக்க முன்வந்தார் மோகன். அப்போது மோகன் பல திரைப்படங்களில் ஹீரோவாக பிஸியாக நடித்துக் கொண்டிருந்ததால் ‘இரவு நேரங்களில் நடித்துத் தருகிறேன்’ என்று சொன்னார். எனவே இரவுக் காட்சிகள் அதிகம் இருக்குமாறு எழுதப்பட்ட திரைக்கதைதான் ‘பிள்ளை நிலா’. இதன் பிறகு மனோபாலா பிஸியான இயக்குநராக மாறுவதற்குக் காரணமாக இந்தத் திரைப்படம் அமைந்தது.
  • 43
Added a news  
அதிக நேரம் தூங்கும் நாடுகளில் இலங்கை மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த மதிப்பு 8.1 மணிநேரமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.உலகில் உள்ள 60 நாடுகளின் சராசரி தூக்கத்தின் அளவைப் பார்த்து, உலகில் எந்த இடத்தில் மக்கள் ஒரு இரவில் அதிக அளவு தூங்குகிறார்கள் என்பதைக் கண்டறிய ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு இரவும் சராசரியாக எந்த நகரம் அதிகம் தூங்குகிறது என்பதைப் பார்க்க ஐக்கிய இராச்சியத்தின் 40 நகரங்களில் இந்த ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஆய்வின்படி, அந்த தரவரிசையில் 12 மணிநேரத்துடன் பல்கேரியா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் அகோலா உள்ளது, இது சராசரியாக 10.2 மணிநேர தூக்கமாக பதிவாகியுள்ளது.சீன நாடு சராசரியாக 6.8 மணிநேரம் தூங்குகிறது மற்றும் தரவரிசையில் 39 வது இடத்தில் உள்ளது.ஜப்பான் 5.5 மணிநேரமும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 5.3 மணிநேரமும் தூங்குகின்றன.உலகில் கடுமையாக உழைக்கும் நாடுகளின் தரவரிசையில் ஆஸ்திரேலியா 8வது இடத்தில் இருப்பது விசேடமாகும்
  • 45
Added a news  
வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஜூன் மாதத்திற்குள் நிறைவு செய்ய அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும், முழுமையான கடன் மறுசீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுப்பதன் மூலம் இலங்கையின் கடன் சுமையை 17 பில்லியன் அமெரிக்க டொலர்களால் குறைக்க முடியும் என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கடன் தவணையைப் பெற்ற பின்னர் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடர முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று புதன்கிழமை (08) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.இலங்கை அணிசேரா வெளிநாட்டுக் கொள்கையைப் பின்பற்றி அனைத்து நாடுகளுடனும் உறவுகளைப் பேணி இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாத்து வருவதனால் இலங்கைக்கு பல சலுகைகள் கிடைத்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.சீனா மற்றும் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைப் பேணி இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி மேலும் சுட்டிக்காட்டினார்.
  • 47
Added a post  
சிவன், பார்வதி மற்றும் விநாயகரின் சிரசில் இருக்கக்கூடிய மூன்றாம் பிறையை நாம் தரிசனம் செய்யும் பொழுது இவர்கள் மூவரின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய மூன்றாம் பிறையை நாம் தரிசனம் செய்வதன் மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. சந்திர பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கவும் இந்த சந்திர வழிபாடு மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அப்படிப்பட்ட சந்திர வழிபாடு நாளை (9-5-2024) வியாழக்கிழமை அன்று வருகிறது.குரு பகவானுக்குரிய கிழமையாகவும் குபேர பகவானுக்குரிய கிழமையாகவும் திகழக்கூடிய வியாழக்கிழமை இந்த சந்திர தரிசனம் வருகிறது என்பதால் குரு பகவான், குபேர பகவான் இவர்களுடைய அருளும் நமக்கு ஒரு சேர கிடைத்து நம் வாழ்வில் இருக்கக்கூடிய பணரீதியான பிரச்சினைகள் அனைத்தும் நீங்குவதற்கு பண வரவை அதிகரிக்கும் ஒரு அற்புதமான நாளாக தான் நாளை திகழ்கிறது. இந்த நாளை எந்த முறையில் நாம் பயன்படுத்திக் கொண்டால் நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய பண தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடையும்.வியாழக்கிழமை என்றாலே குரு பகவானுக்குரிய கிழமையாக திகழ்கிறது. அதனால் அன்றைய தினம் மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொள்வது மிகவும் சிறப்பு. நாளை மாலை 6:00 மணிக்கு மேல் மேற்கு திசையில் மூன்றாம் பிறை தரிசனத்தை நாம் காணும் பொழுது மஞ்சள் நிற ஆடை அணிந்திருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் நம்முடைய நெற்றியில் மஞ்சளை வைத்திருக்க வேண்டும். இதோடு இன்னும் இரண்டு பொருட்களை நம் கையில் வைத்துக் கொண்டு சந்திர தரிசனத்தை செய்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான பண தேவைகள் பூர்த்தியடைவதற்குரிய வழிகள் நமக்கு கிடைக்கும்.அந்த பொருட்கள் தான் விரலி மஞ்சள் மற்றும் நாணயம். நாளை மாலை 6:00 மணிக்கு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு சிறிது மஞ்சளை இழைத்து நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள். பெண்களாக இருக்கும் பட்சத்தில் மஞ்சள் நிற பூக்களை தலையில் வைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு. பிறகு கையில் ஒரு விரலி மஞ்சளையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் வைத்துக்கொண்டு சந்திர தரிசனம் செய்ய வேண்டும்.அப்படி சந்திர தரிசனம் செய்யும் பொழுது நமக்கு தேவையான பண வரவு கிடைக்க வேண்டும் என்றும் வருமானம் அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றும் சந்திர பகவானை பார்த்து மனதார வழிபட வேண்டும். பிறகு இந்த ஒரு ரூபாய் மற்றும் மஞ்சளை எடுத்து வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து விட்டு நாம் விளக்கேற்றி வைத்திருப்போம் அல்லவா அந்த தீபத்தையும் சிவபெருமானையும் பார்வதியையும் விநாயகரையும் மனதார வழிபட வேண்டும்.சந்திர தரிசனம் செய்யும் பொழுது “ஓம் சந்திரமௌலீஸ்வராய நமஹ” என்னும் மந்திரத்தை மனதார கூற வேண்டும். இந்த ஒரு ரூபாய் மற்றும் விரலி மஞ்சள் மூன்று நாட்கள் அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள். மூன்று நாட்கள் கழித்து ஒரு ரூபாய் நாணயத்தை சுப காரிய செலவிற்காக பயன்படுத்திக் கொள்ளுங்கள். மஞ்சளை பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். விரலி மஞ்சள் கிடைக்காத பட்சத்தில் குண்டு மஞ்சளையும் பயன்படுத்திக் கொள்ளலாம். குண்டு மஞ்சளை பயன்படுத்தினால் பெண்கள் அதை உரசி முகத்தில் தடவி குளிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இந்த கிழமை குருபகவானிற்குரிய கிழமை ஆகவும், நேரம் குபேர பகவானுக்குரிய நேரமாக திகழ்வதால் இந்த வழிபாட்டை செய்யும் பொழுது இவர்கள் இருவரின் அருளையும் பரிபூரணமாக பெறுவோம் என்பதால் நம்முடைய வாழ்வில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பண தேவைகளும் பூர்த்தியடையும்.
  • 52
  • 54
  • 57
  • 57
  • 57
  • 57
Added a post  
ஒரு கிராமத்தில் ஒருவர் இருந்தார்.ருசியான வித விதமான வடைகள் சுடுவதில் வல்லவர்.அது தான் அவரது தொழிலும் கூட.அவருக்கு எழுதப் படிக்கத் தெரியாது.அதனால் எந்த செய்தித்தாள்களையும் அவர் படிக்க மாட்டார்.செய்தித்தாள்களைப் படிக்கும் பழக்கம் இல்லாததால் நாட்டில் என்ன நடக்கிறது என்பதைக் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்.அதனால் டிவி பார்க்கும் பழக்கமும் அவருக்கு இல்லை.அதனால் அவரது முழுக் கவனமும் அவரது வடை தொழிலில் மட்டுமே இருந்தது.வேறு எந்த சிந்தனையும் அவருக்கு இல்லை.விதவிதமான ருசியான வடைகளைத் தருவதால் அதுவும் குறைவான விலையில் தரமாகத் தருவதால் அவரது கடைக்கு வாடிக்கையாளர்கள் கூட்டமும் மிக அதிகமாக இருந்தது.வருமானமும் நிறைவாக இருந்தது.அவரும் மகிழ்ச்சியாக இருந்தார்.அவருக்கு ஒரு மகன் இருந்தான்.அவன் சென்னையில் மிகப் புகழ்பெற்ற ஒரு கல்லூரியில் எக்கனாமிக்ஸ் படித்து வந்தான்.பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைத்தளங்களிலும் மிக ஆக்டிவ்வாக இருப்பான்.விடுமுறையில் ஊருக்கு வந்தான்.அப்படியே தன் தந்தையின் கடைக்கும் போனான்.அங்கே வடைகளுக்காக விதவிதமான மளிகை சாமான்கள், காய்கறிகள் எண்ணெய் வகைகள் என ஏகப்பட்ட சரக்குகளை தன் தந்தை வாங்கி வைத்து இருப்பதைப் பார்த்தான்.நேராக தந்தையிடம் சென்றான்,"என்னப்பா நீ...முட்டாத்தனமா இருக்க...நாட்ல பொருளாதார மந்தநிலை இருக்குறது உனக்கு தெரியாதா?பல ஆட்டோமொபைல் கம்பனிங்க சங்கடத்துல இருக்கு.நிறைய ஷோரூம்களை மூடிட்டாங்க.நிறைய பேருக்கு வேலை போச்சு.இது அப்படியே எல்லா இன்டஸ்ட்ரிக்கும் பரவ போகுதாம்.பணக் கஷ்டம் வர போகுதாம்.பேங்குங்க எல்லாம் திவாலாகப் போகுதாம்.அதனால பணத்தை சேர்த்து வையி.இப்படி கன்னாபின்னான்னு சரக்குகளை வாங்கி குமிக்காதே...‌" என்று தான் படித்த மைக்ரோ எக்கனாமிக்ஸ் மற்றும் மேக்ரோ எக்கனாமிக்ஸ் கலந்து லெங்க்த்தாக ஒரு ஸ்பீச் தந்தான்.போதாக்குறைக்கு பொருளாதார மந்தநிலை பற்றி பேஸ்புக்கில் எழுதப்பட்ட ரைட்டப்களையும், வாட்சப்பில் வரும் தகவல்களையும் வேறு தன் தந்தைக்கு காட்டினான்.இதையெல்லாம் பார்த்த அவனது தந்தையும்,"ஆஹா நமக்கு தான் எழுதப் படிக்கத் தெரியாது.நம்ம புள்ள மெட்ராஸ்ல படிக்குறவன்.அவன் சொன்னா தப்பா இருக்காது...."என்று எண்ணினார்.உடனடியாகத் தன்னிடம் இருக்கும் சரக்குகளைப் பாதியாக குறைத்தார்.வாங்கிய இடத்திலேயே அதைத் திரும்பத் தந்தார்.ஆரம்பத்தில் 50 விதமான வடைகளை விற்றவர், மறுநாளே வடைகளில் வெரைட்டியை 10 ஆக குறைத்தார்.விற்பனையையும் குறைத்தார்.அவரது கடைக்கு அவரது வெரைட்டியான வடைகளுக்காகவே வந்த கூட்டம் வெரைட்டியான வடைகள் கிடைக்காததால் பாதியாக குறைந்தது.வாடிக்கையாளர்கள் கூட்டம் பாதியாக குறைந்ததைப் பார்த்து இவரும் தன் விற்பனையை மேலும் சுருக்கினார்.உளுந்த வடையை மட்டுமே போடத் துவங்கினார்.உளுந்த வடையை மட்டும் விரும்பும் வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்கு வந்தனர்.அதைப் பார்த்ததும் மேலும் பதறினார்.விற்பனை மந்தமாவதால் நாளை முதல் என் வடை கடை காலவரையற்ற விடுமுறை விடப்படுகிறது...என்ற போர்டை வைத்து கடையை மூடினார்.தன் மகனை அழைத்தார்,"ஆமாப்பா...நீ சொன்ன மாதிரியே நாட்ல பொருளாதார மந்தநிலை இருக்கு.நம்ம கடைக்கு வர்ற ஆட்கள் கூட குறைஞ்சுகிட்டே போயி...கடைசில யாருமே வரலை... வியாபாரமும் படுத்திருச்சி...இருக்குறதையாவது காப்பாத்தனும்ன்னு நானும் கடையையே மூடிட்டேன்..." என்றார்.தான் படிக்கும் எக்கனாமிக்ஸ் அறிவைக் கொண்டு தன் தந்தையை தான் காப்பாற்றியதாக மகனும் தனக்குத் தானே பெருமைப்பட்டுக் கொண்டான்.ஆனால் நன்றாக வியாபாரம் நடந்து கொண்டு இருந்த வடை கடையை எதற்காக அவர் மூடினார் என்பது மட்டும் அவரது வாடிக்கையாளர்களுக்கு கடைசி வரையிலும் தெரியவே இல்லை.
  • 60
Added a post  
தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலையில் செயற்கை இனிப்பு கலந்த பானங்களை குடிப்பதனால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.செயற்கை இனிப்பு பானங்களை குடிப்பதால் தண்ணீர் குடிக்க வேண்டிய தேவை அதிகரிக்கும் எனவும், செயற்கை இனிப்பு பானங்களில் அதிகளவு சர்க்கரை இருப்பதே இதற்குக் காரணம் எனவும் கூறியுள்ளார்.வெப்பமான காலநிலையில் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைப்பது மிகவும் முக்கியம் என்பதுடன், கடினமான செயல்களை முடிந்தவரை தவிர்ப்பது மிகவும் அவசியம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.தற்போதைய சூழ்நிலையில், இயற்கையான பானங்களை தயாரித்து பருகுவது மிகவும் அவசியம், முடிந்தவரை குளிர்ந்த நீர், பல்வேறு வகையான பழச்சாறுகள் போன்ற இயற்கை பானங்களை அருந்துவது அவசியம். இதேவேளை, நாளொன்றுக்கு பல தடவைகள் குளிர்ந்த நீரால் உடலை நனைப்பது, ஆரோக்கியமான குழந்தைகளை முடிந்தவரை தண்ணீரில் வைத்திருப்பது அவசியம் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.000 
  • 137
Added a post  
பிரித்தானியாவைத் தளமாகக்கொண்ட மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிக்கா (AstraZeneca) தனது கொவிட் - 19 தடுப்பூசிகளை உலகம் முழுவதும் இருந்து மீளப்பெறுவதற்கு தீர்மானித்துள்ளது.அஸ்ட்ராஜெனிக்காவின் கோவிட்-19 தடுப்பூசி, அரிதான மற்றும் ஆபத்தான பக்க விளைவை ஏற்படுத்தும் என்று நீதிமன்ற ஆவணங்களின் ஊடாக அண்மையில் ஒப்புக்கொள்ளப்பட்டது.இந்நிலையிலேயே, உலகம் முழுவதும் இருந்து தடுப்பூசிகளை மீளப்பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, தடுப்பூசி இனி தயாரிக்கப்படவோ அல்லது விநியோகிக்கப்படவோ மாட்டது என நிறுவனம் அறிவித்துள்ளாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தடுப்பூசிகளை மீளப்பெறுவதற்கான விண்ணப்பம் மார்ச் ஐந்தாம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், மே ஏழாம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது000
  • 138
Added a post  
வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தினால் 240 கணினிகள் கொள்வனவு செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக கூறுவிலை கோரல் வழங்கிய நிறுவனம் ஒன்று வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.குறித்த கடிதத்தின் பிரதிகள் வடக்கு மாகாண ஆளுநர், பிரதம செயலாளர் உள்ளிட்ட ஐவருக்கு பிரதியிடப்பட்டுள்ளது.கடிதத்தில் வடக்கு மாகாண கல்வித்திணைக்களம் கோரிய கூறு விலை பிரகாரம் 240 கணினிகள் கொள்வனவு செய்யும் கோரிக்கையினை நூறு வீதம் தமது நிறுவனம் நிறைவு செய்துள்ளதோடு, ஏனையவர்களை விட விலையும் தங்களுடையதே குறைவானதாகவும் இருந்ததாகவும்.ஆனால் 16.07.2021 திகதிய கொள்வனவு கடிதத்திற்கு அமைவாக தங்களின் விலையினை விட ஒரு கணினிக்கு 11 ஆயிரத்து 500 ரூபா அதிக விலையினை கொண்ட வழங்குனரிடம் கொள்வனவு செய்ய கொள்வனவு கட்டளை அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் படி 11500 x 240 = 2760000.00 ரூபா அதிக விலை செலுத்தப்படவுள்ளதாகவும் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டுப்பட்டுள்ளது.எனவே இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சு  குறித்த விடயம் தொடர்பில் எமக்கும் கடிதம் கிடைப்பெற்றது என்றும். எனவே இது தொடர்பான விளக்கம் ஆளுநருக்கு அனுப்பட்டுள்ளது. 240 கணினிகள் கொள்வனவு விடயத்தில் முறைப்பாடு செய்தவரிடம் கணினிகள் கொள்வனவு செய்வதற்கு பொருத்தமற்றவர் என தொழிநுட்ப குழு பரிந்துரைத்துள்ளது.எனவே தொழிநுட்ப குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே மேற்கொள்வனவு இடம்பெற்றது எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 138
Added a post  
சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் இடம்பெற்ற மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து, நாடு முழுமையாக இன்னும் மீளவில்லையென்றும், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டமிட்ட முக்கியமான சீர்திருத்தங்களை எந்தவகையிலும் மாற்றியமைக்கக் கூடாதென்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.மத்திய வங்கியின் தலைமையகத்தில் நேற்று (07) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே ஆளுநர் இவ்விடயங்களை குறிப்பிட்டார்.நாட்டின் பொருளாதாரத்தை 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.இருந்தபோதிலும், அதனை மிகவும் வெற்றிகரமான மற்றும் நிரந்தரமான பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மேம்படுத்தும் போது தவறான திட்டமிடப்பட்ட கொள்கைகளை கையாளக்கூடாது .இச்சந்தர்ப்பத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு பரந்த அரசியல் மற்றும் சமூக இணக்கப்பாட்டின் அடிப்படையில் பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்து அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது.இதனுடாக நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தி பொது மக்களின் சேம நலன்கள் மேம்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க புதிய சட்டத்துக்கமைவாக இலங்கை மத்திய வங்கியின் 2023 வருடாந்த பொருளாதார விளக்கவுரை, மற்றும் நிதி அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் இந்த விடயங்களை தெரிவித்தார்.இந்த ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் டி.எம்.ஜே.வை பி.பெர்னாண்டோ , முனைவர், கலாநிதி சி.அமரசேகர, பொருளாதார ஆராய்வு பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜெகஜீவன், பொருளாதார ஆராய்வு மேலதிகப் பணிப்பாளர் கலாநிதி எல்.ஆர்.சி.பத்பெரிய ஆகியோரும் கருத்துத் தெரிவித்திரந்தமை குறிப்பிடத்தக்கது000
  • 138
Added a post  
சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களிடம் ஆயுதப்படை உறுப்பினர்கள் சிக்கக்கூடாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 30 ஆண்டுகளாக நம் நாட்டில் நடந்து வந்த கொடூரமான போரை தோற்கடிக்க தங்கள் உயிரை தியாகம் செய்த ஏராளமான ஆயுதப்படை வீரர்கள், ஒரு குழுவின் மனித கடத்தலின் விளைவாக சட்டவிரோதமாக ரஷ்ய - உக்ரைன் போர் முனைக்கு சென்றனர்.இந்த போர் முனைகளில் பணிபுரியும் போது கணிசமான எண்ணிக்கையான எமது போர் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலுமொரு பகுதியினர் காயமடைந்துள்ளதாகவும் உண்மைகள் வெளியாகியுள்ளன.இலங்கையின் முப்படைகளிலும் கௌரவமாக சேவையாற்றி ஓய்வு பெற்ற இவ்வாறான போர்வீரர்கள் வெளிநாட்டில் கூலிப்படையாக செயற்படுவது வருத்தமளிக்கிறது.வெளிநாட்டு இராணுவத்தில் சேர்ப்போம், பெரும் சம்பளம் கொடுப்போம், குடியுரிமை மற்றும் பெரும் சலுகைகள் பெறுவோம் என்று கடத்தல்காரர்கள் கொடுத்த பொய் வாக்குறுதியின்படி போர் வீரர்கள் ரஷ்ய - உக்ரைன் போர்முனைக்கு கூலிப்படையாக அனுப்பப்பட்டனர், ஆனால் அவர்களுக்கு சம்பளம் எதுவும் கிடைக்கவில்லை.இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இந்த கடத்தல்காரர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது000
  • 137
Added a post  
தேர்தலை இலக்காக கொண்டே அரசாங்கம் அவரச அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.இதேநேரம் ”நாட்டில் தேர்தல் சட்டம் இத்தருணத்தில் அமுலில்தான் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறுகிறது.தேர்தலொன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டு வேட்புமனுக்கள் பெற்றப்பட்டுவிட்டன. ஆனால், தேர்தல் நடைபெறவில்லை. இதன் காரணமாகவே தேர்தல் சட்டம் நடைமுறையில் இருப்பதாக ஆணைக்குழு கூறுகிறது.இந்த பின்புலத்தில் எதிர்வரும் ஐந்து மாதங்களில் ஜனாதிபதித் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கு இடையில் அரசாங்கம் அவசர அவசரமாக மேற்கொள்ளும் அபிவிருத்திப் பணிகளும் நிதி ஒதுக்கீடுகளும் தேர்தலை இலக்காக கொண்டதென கூறப்படுகிறது. எனது நிலைப்பாடும் அதுதான்.வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதிக்கான பணிகளை ஜுலை 30 ஆம் திகதிக்கு முன்னர் முன்னெடுக்குமாறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக மலையகப் பகுதிகளில் இந்தப் பணிகளை துரிதப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் நவம்பர் 30 ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.மலையகத்தில் இவ்வாறு அபிவிருத்திப் பணிகளை துரிப்படுத்துமாறு கோருவது நல்ல விடயம். அது முன்னெடுக்கப்பட வேண்டிய விடயம்தான். என்றாலும், தேர்தலை இலக்காகக் கொண்டு செய்வது பொறுத்தமற்றது.பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பகிரப்படும் அரிசியை வழங்க முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் செல்வதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அது அரசியல் நோக்கங்களை இலக்காகக் கொண்டது.இத்தருணத்தில் அரிசி அல்லது எந்தவொரு நிவாரணம் பகிரப்பட்டாலும் அது மக்களின் வரிப் பணத்தில் வழங்கப்படும் நிவாரணமென அடையாளப்படுத்தப்பட வேண்டும். 2015 ஆம் ஆண்டுமுதல் இந்த முறைமைகளை நாம் பின்பற்றினோம்.உள்ளூராட்சிமன்றங்களுக்கு 10 மில்லியன் வரை நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன. அதனை வரவேற்கிறோம்.அதற்கு பதிலாக குறித்த தேர்தலை நடத்தினால் அதனை இலகுவாக செய்ய முடியும். தற்போது முன்னெடுக்கப்படும் செயல்பாடுகள் ஆளுநரின் கீழ் முன்னெடுக்கப்படும். அவை முற்றிலும் அரசியல் சார்பானது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 140
Added a post  
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு நேர்காணல்களை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக டிசம்பர் 12, 2021 அன்று நடைபெற்ற போட்டி பரீட்சை முடிவுகளின்படி ஆங்கிலப் பாடம் தொடர்பான ஆட்சேர்ப்பு நேர்காணல் இடம்பெறவுள்ளது.அதன்படி, மே 10, 11, 13 மற்றும் 20 ஆகிய திகதிகளில் நேர்முகத் தேர்வு நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.பொருளாதாரம் மற்றும் கல்வி அமைச்சின் வளாகத்தில் இந்த நேர்காணல்கள் இடம்பெறவுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இந்த நேர்காணலுக்கான தகுதியான விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் மற்றும் அழைப்பு கடிதம் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 139
Added a post  
இலங்கையில் ஆண்டு தோறும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை மூவாயிரத்தினால் அதிகரித்துச் செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2015 ஆம் ஆண்டில் 30657 ஆக காணப்பட்ட சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை, 2023 ஆம் ஆண்டில் 72546 ஆக உயர்வடைந்துள்ளது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.எனவே இவ்விடயத்தில் அதிக கவனமெடுத்து சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை நாடு முழுவதிலும் முன்னெடுக்கவுள்ளது அமைச்சர் ரமேஷ் பத்திரன மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.000 
  • 139
Added a post  
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.இதற்கமைய, முதலில் துடுப்பாடிய டெல்லி கெப்பிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இந்நிலையில், 222 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் 20 ஓவர்களில் 08 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.000
  • 141
Added a post  
எதிர்வரும் 10ஆம் திகதிக்கு முன்னர் மின் கட்டண குறைப்பு முன்மொழிவுகளை வழங்குமாறு மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இது தொடர்பான முன்மொழிவுகள் இம்மாதம் முதலாம் திகதி வழங்கப்படவிருந்த போதிலும் மின்சார சபை அதற்கு கால அவகாசம் கோரியுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.அதன்படி எதிர்வரும் 10 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.அதன்படி ஜூலை மாதம் மின் கட்டணம் குறைப்பு சதவீதம் அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 140
Added a post  
தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த 2 வாரங்களுக்குள் அந்த மாணவர்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கல்விச் செயற்பாடுகளின் பின்னடைவை சீர்செய்யும் முகமாக இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை 2 நிலைகளின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதற்காக 35 ஆயிரம் ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 139
Added a post  
இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்று ( 08 ) அறிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு எதிரான மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்ததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணயின் இறுதியில், உயர் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி விசாரணையை நிறைவு செய்த நீதியரசர்கள் அமர்வு, அதன் தீர்ப்பை காலவரையறையின்றி ஒத்திவைத்தது. இராஜாங்க அமைச்சரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மற்றும் பிரஜாவுரிமைக்கு எதிராக தாம் தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்ட 2 வாரங்களின் பின்னர் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மேன்முறையீட்டு மனுவை முன்வைத்திருந்தார். டயனா கமகே மற்றும் பலரை தனது மேன்முறையீட்டின் பிரதிவாதிகளாக குறிப்பிட்ட ஓசல ஹேரத், இரட்டைக் குடியுரிமையைப் பெற்றுள்ளதால், டயனா கமகே நாடாளுமன்ற உறுப்புரிமையை வகிக்கத் தகுதியற்றவர் என தீர்ப்பளிக்குமாறு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது000 
  • 141