இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். தோற்றப்பொழிவில் மாற்றம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சில தெளிவுகள் ஏற்படும். இறை பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பயணம் மூலம் ஆதாயம் அடைவீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபார விஷயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
ரிஷபம்
தொழில் சார்ந்த முன்னேற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் ஒரு விதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். துணைவருடான இணக்கம் மேம்படும். உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கணவன், மனைவி இடையே விட்டுகொடுத்து செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மிதுனம்
பிற மக்களால் ஆதாயம் அடைவீர்கள். நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்ளவும். மேல் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து சொல்லவும். நெருக்கமானவர்களால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். வியாபார முதலீடு குறித்த முயற்சிகள் மேம்படும். நன்மை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
கடகம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள்.தேடி வந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
சிம்மம்
மனதில் இருந்த ஆசைகள் நிறைவேறும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வீடு மற்றும் வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். ஆராய்ச்சி பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் ஏற்படும். இழுபறியாக இருந்த வேலைகள் நிறைவேறும். எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கன்னி
உறவுகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். புதிய நபர்களால் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். வியாபார முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு
துலாம்
சிந்தனைகளில் கவனம் வேண்டும். மறதி பிரச்சனையால் சில தடுமாற்றங்கள் உண்டாகும். உறவுகள் இடத்தில் அதிக உரிமை கொள்ள வேண்டாம். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று செயல்படவும். உதாசினமான கருத்துக்களை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
விருச்சிகம்
மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமித்தமான சில சூட்சுமங்களை அறிவீர்கள். சுப காரிய பேச்சுவார்த்தைகளில் விவேகம் வேண்டும். தன வரவுகள் திருப்தியாக இருக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதளவில் இருந்த குழப்பங்கள் குறையும். குழப்பம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிகப்பு
தனுசு
உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். மனதை உருத்திய சில கவலைகள் மறையும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். அரசு காரியங்களில் இருந்த தாமதங்கள் மறையும். அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வியபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் ஒத்துழைப்பால் காரிய அனுகூலம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மகரம்
ஆதாரமற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிர்பார்த்த சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். இணையதள பயன்பாடு கல்வியில் அதிகரிக்கும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம்
தாய்வழி உறவுகள் வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வருமானம் குறித்த எண்ணம் மேம்படும். நண்பர்களின் ஆதரவுகள் மேம்படும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
மீனம்
திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வெளியூர் பயணங்களில் விவேகம் வேண்டும். தொழில் சார்ந்த ரகசியங்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மறையும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
ஒருநாள் முல்லா நசுரூதின் அவர்கள் ஒரு ஆடம்பர வசதியுள்ள மனிதர்கள் மட்டுமே செல்ல முடிந்த ஒரு ஹோட்டலுக்கு உணவு உண்ண செல்கிறார். முல்லா அவர்கள் எப்போதும் எளிமையாக இருப்பதையே விரும்புவார். எளிய ஆடைகளை மட்டுமே அணிவார். அவர் ஆடம்பரமான ஒரு டேபிளின் அருகிலுள்ள நாற்காலியில் போய் அமர்கிறார். அதற்குரிய சர்வர் அவரிடம் மெனு கேட்க வரும் போது, முல்லா அவர்களின் சாதாரண தோற்றத்தை பார்த்து, " இவன் தோற்றத்தை பார்த்தாலே நமக்கு ஒரு டிப்ஸ்ஸும் தரப் போவதில்லை ", என்று மனதுக்குள் எண்ணி, முல்லா அவர்களை ஏளனப் பார்வையில் பார்த்து, " என்னா வேணும் ", என்று மரியாதை குறைவாக பேசி மிகவும் சூடாக நடந்து கொள்கிறான். அவர் கேட்ட உணவை தாமதமாக்கி அனாவசியமாக மேஜையில் வைக்கிறான். முல்லா அவர்கள் அதையெல்லாம் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. சாப்பிடுகிறார்.
பில் வருகிறது. தன் அழுக்கு சுருக்குப் பையில் இருந்து தேடி 100 வெள்ளி காசுகளை அனாவசியமாக வைத்து விட்டு சர்வரை பொருட்படுத்தாமல் வெளியே செல்கிறார். " 100 வெள்ளி காசுகளா! அவன் வாழ்நாளில் எந்த வசதியானவரும் அளித்திடாத டிப்ஸ் ஆச்சே", என்று விக்கித்து போகிறான். "இந்த மனிதரிடம் இவ்வளவு கீழ் தரமாக நடந்து கொண்டிருக்கக் கூடாது" என்று கூனிக் குறுகி தலை குனிகிறான்.
சில மாதங்கள் சென்றன. முல்லா அவர்கள் மறுபடியும் அதே ஹோட்டலுக்கு சாப்பிட வருகிறார். அதுவும் அதே டேபபிளுக்கு. நம்ம பழைய ஆள் தான் இப்போதும் சர்வர். நம்ம சர்வருக்கு தலை கால் புரியவில்லை. முல்லா அவர்களை விழுந்து விழுந்து கவனிக்கிறார். " இன்றைக்கு நல்ல வேட்டை தான். நல்லா கவனிச்சா இன்றைக்கு எப்படியும் குறைந்தது 200 பவுன் காசுகள் கிடைக்கும்", என்று மனதுக்குள் சர்வர் நினைத்து விழுந்து விழுந்து உபசரிக்கிறான். பில் வந்தது. சர்வர் டிப்ஸ் தட்டில் பார்க்கிறான். முல்லா அவர்கள் வெறும் 1 வெள்ளி காசை வைத்து விட்டு எழுந்திருக்கிறார். சர்வருக்கு ஷாக். ஒன்னும் புரியவில்லை. " என்னடா, விழுந்து விழுந்து கவனித்தேன். வெறும் 1 வெள்ளி காசு தானா? " என்று மனதுக்குள் வெம்பினான். முல்லாவிடமே இதுபற்றி கேட்கலாம் என்று கேட்டே விட்டான். " என்ன ஐயா, போன தடவை தங்களை உதாசீனப் படுத்தி சரியாக கவனிக்கவில்லை. அப்போது 100 வெள்ளி காசுகள். இப்போது விழுந்து விழுந்து கவனித்தேன். வெறும் 1 வெள்ளி காசு தானா? என்று கேட்கிறான்.
இதற்கு முல்லா கூறுகிறார். "நான் போன தடவை 100 வெள்ளி காசுகள் தந்தது இப்போது இன்று நீ தந்த தடபுடல் கவனிப்புக்கு. இன்றைக்கு நான் தந்த 1 வெள்ளி காசு போன தடவை எனக்கு அன்று நீ செய்த உதாசீன நடத்தைக்கு", என்று சொல்லியவாறு நடக்கிறார். சர்வருக்கு நல்ல பாடம் தான்.
விசுவாவசு வருடம் ஆடி மாதம் 31 ஆம் தேதி சனிக்கிழமை 16.8.2025
இன்று அதிகாலை 01.40 வரை சப்தமி. பின்னர் இரவு 11.13 வரை அஷ்டமி. பின்பு நவமி.
இன்று காலை 08.26 வரை பரணி. பின்னர் கிருத்திகை.
இன்று காலை 10.00 வரை விருத்தி. பின்னர் துருவம்.
இன்று அதிகாலை 01.40 வரை பவம். பின்னர் பிற்பகல் 12.27 வரை பாலவம். பின்பு இரவு 11.13 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்
இன்று காலை 08.26 வரை சித்த யோகம். பின்னர் அமிர்த யோகம்.
நல்ல நேரம் :
காலை : 07.45 முதல் 08.45 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
இரவு : 09.30 முதல் 10.30 மணி வரை
ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று கூலி திரைப்படம் வெளியானது. மிகுந்த ஆவலுடன் படம் பார்க்க சென்ற ரசிர்கள் தங்களது நெகட்டிவ் விமர்சனங்களையே அதிகம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதேசமயம் முதல் நாளில் உலக அளவில் மொத்தம் 170 கோடி ரூபாயை படம் வசூலித்திருப்பதாக ட்ராக்கர்கள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான ரமேஷ் கண்ணா கொடுத்திருக்கும் பேட்டி அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியை வைத்து இயக்கிய தர்பாரும், சிவா இயக்கிய அண்ணாத்த படமும் சூப்பர் ஸ்டாருக்கு கெட்ட கனவுகளாகவே இருக்கும். அந்த இரண்டு படங்களும் அவருக்கு கொடுத்த ரிசல்ட்டுகள் அப்படி. படம் தோல்விi சந்தித்து; அவரது சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கே ஆப்பு வைக்கும் அளவுக்கு சென்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். 74 வயதில் இளம் இயக்குநர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதை பார்த்து பலரும் சந்தோஷப்பட்டாலும்; படத்தின் கதைகள்தான் கோளாறு செய்கின்றன. இந்தப் படத்திலும் பெரிய (புதிய) கதையெல்லாம் ஒன்றும் இல்லை. நண்பரை கொலை செய்தவர்களை பழி வாங்கும் ஹீரோ என்ற பழைய கதைதான். இப்படி பழைய கதைகளை பட்டி டிங்கரிங் பார்த்து சில மாஸ் சீன்கள், ரஜினியை புகழ்ந்து சில பாடல்கள், பான் இந்தியா ஸ்டார்கள் ஆகியவற்றை வைத்து படத்தை இயக்குநர்கள் ஒப்பேத்திவிடுகிறார்களோ என்ற சந்தேகம் வலுக்க தொடங்கியிருக்கிறது.
இந்நிலையில் ஜெயிலர் படம் பற்றி இயக்குநரும், நடிகரும், ரஜினியின் நண்பருமான ரமேஷ் கண்ணா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது.அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தை எல்லாம் கொஞ்சம் நேரத்துக்கு மேல் பார்க்க முடியவே இல்லை. சரி என்னதான் கதை என்று பார்த்தால் மகனை கொன்றுவிடுகிறார். இதுதானே சிவாஜி நடித்த தங்கப்பதக்கம் படத்தின் கதை. ஆனால் அந்தப் படத்தில் ஒரு ஃபேமிலி ட்ராமா இருந்தது; திரைக்கதையோடு இழுத்து சென்றார்கள். ஜெயிலர் அப்படி இல்லையே. படம் முழுக்க எல்லோரையும் சுடுகிறார். கடைசியில் மகனையும் சுடுகிறார் அவ்வளவுதான்" என்றார். ரஜினி இப்போது ஜெயிலர் 2வில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் நேற்று திரையரங்கில் வெளியானது.
ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர். அனிருத் இசையமைக்க நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தார். இதற்கு, பல சினிமா நட்சத்திரங்கள், அரசியல் நபர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
தற்போது, அனைவருக்கும் நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கனடாவின் மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
யோர்க் பிராந்திய காவல்துறையினர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். யோர்க் பிராந்தியத்தின் 14ம் இலக்க வீதி மற்றும் மெக்வோன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயமடைந்தவரின் நிலைமை குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.
விமான பணியாளர்களின் வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து எயார் கனடா விமான நிறுவனம் தங்களது விமான சேவையை இரத்து செய்து வருகிறது. விமான பணியாளர்களின் 72 மணி நேர வேலை நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து கனடாவின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனமான எயார் கனடா தனது விமான சேவையை இரத்து செய்து வருகிறது.
இந்த 72 மணி நேர வேலை நிறுத்த மானது சனிக்கிழமை காலை 1 மணி முதல் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதியங்கள் மற்றும் பிற கோரிக் கைகளை முன்வைத்து 10,000 விமான பணியாளர்களை பிரதிநிதித்துவம் கனேடிய யூனியன் ஆஃப் பப்ளிக் எம்ப்ளாயீஸ்க்கும், எயார் கனடா நிறுவ னத்திற்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில் தீர்வு எட்டப்படாததை தொடர்ந்து இந்த வேலை நிறுத்த அறிவிப்பானது வெளியாகியுள்ளது.
இந்த திட்டமிடப்படாத வேலை நிறுத்தம் காரணமாக தினமும் 25,000 கனேடியர்கள் உட்பட 130,000 பயணிகள் பாதிக்கப்படக் கூடும் என்று சுமார் 259 விமானங்களை 64 நாடுகளுக்கு இயக்கும் எயார் கனடா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த இடையூறு நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களையே பாதிக்கும் என்றும் எயார் கனடா எச்சரித்துள்ளது.
நாகலிங்கப்பூ தென்அமெரிக்காவை சேர்ந்தது. இதன் இலைகளை மையாக அரைத்து, பூஞ்சை கிருமியால் தோன்றும் சொறி, சிரங்கு, படர் தாமரை, படை உள்ள இடங்களில் தடவ குணமுண்டாகும். இதன் பூவின் லிங்கம் போன்ற பகுதியை அரைத்து புண்களின் மேல் தடவ புண்கள் ஆறும்.
உடல் சூடாக இருந்தாலே முடிக் கொட்டும்.
- வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து நன்றாக ஆறியவுடன் தலையில் தேய்த்துவிட்டு பிறகு குளிக்க வேண்டும். சூடாகவே தேய்தால், தற்சமயம் இருக்கற முடியும் கொட்டிவிடும் வாய்ப்பு அதிகம்.
- இரவு தூங்க செல்வதற்கு முன் சுத்தமான தேங்காய் எண்ணெய்யை லேசாக தலையில் தேய்த்துவிட்டு படுக்கலாம்.
- தலைக்கு குளித்துவிட்டு ஹேர் ட்ரையர் அல்லது ஃபேன் காற்றில் காயவிடாமல் ஒரு 10 நிமிடம் வெயிலில் நின்றால் முடி கொட்டாது.
கொஞ்சம் பொறுமை தேவைபடும் வழிகள் கீழே :
- வெள்ளைப்பூண்டு, இஞ்சி இரண்டையும் நல்லெண்ணெயில் போட்டு அடுப்பில் வைத்து சூடு செய்ய வேண்டும். நுரை பொங்கி வந்தவுடன் அடுப்பை சன்னம் செய்து அணைத்துவிட்டு ஆறியவுடன் தலைக்கு தேய்க்க வேண்டும். இரவில் தேய்த்துவிட்டு மறுநாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும்.
- சிறிய வெங்காயத்தை அரைத்து அதன் சாற்றை தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்.
- வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து தேய்த்துக் குளிக்கலாம்.
- கற்றாழையின் (aloe vera) தோலை சீவினால் மஞ்சள் நிறத்தில் ஒரு திரவம் வரும். அதை தடவலாம். அந்த ஜெல்லையும் அரைத்து தேய்த்துவிட்டு சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்.
- வேப்பிலை, மருதாணி, செம்பருத்தி இலைகளை அரைத்து அதன் சாற்றை தேய்த்துவிட்டு பிறகு குளிக்கலாம். செம்பருத்தி இலை சேர்ப்பதால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- தினமும் தலைக்கு தேய்க்கும் தேங்காய் எண்ணெய்யில் சிறிது விளக்கெண்ணெய் (Castor oil) சேர்த்துக் கொள்ள வேண்டும். 1/3 அளவு. இரண்டையும் நன்றாக கலந்து தேய்த்தால் முடி கொட்டுவது குறையும்.(விளக்கெண்ணெய் என்றால் விளக்கு ஏற்றும் எண்ணெய் இல்லை. விளக்கெண்ணெய் என்று கடையில் இருக்கும். கொஞ்சம் அடர்த்தி அதிகமாக இருக்கும்)
அதிகமாக தண்ணீர் குடித்தாலே முடிக் கொட்டாது. பொடுகு இருந்தால் முடி கொட்டும். பொடுகு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
அடிக்கடி ஷாம்பு பயன்படுத்தக் கூடாது. சும்மா கூட வெறும் நீரை தலைக்கு ஊற்றிக் கொள்ளலாம்.
வெந்நீரை தலையில் ஊற்றுவதை முற்றிலும் தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.
கீரைகள் அதிகமாக சாப்பிட வேண்டும்.(எங்கள் வீட்டில் தினமும் ஒரு கீரையை வைத்து சாவடிப்பார்கள். சாப்ட்டா தான் முடி எல்லாம் கொட்டாது என வசனம் வேறு. உண்மையோ பொய்யோ கீரை சாப்பிடுவது உடலுக்கு நல்லது)
புரதம் அதிகம் உள்ள உணவுகளை உண்ணலாம்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பொறுப்புகள் குறையும். வேலையாட்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஏற்றுமதியில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். கலைத்துறையில் முயற்சிகள் சாதகமாகும். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு
ரிஷபம்
திட்டமிட்ட சில பணிகளில் தாமதம் ஏற்படும். குழந்தைகள் இடத்தில் அனுசரித்து பேசவும். வாகன பயணங்களில் மிதவேகம் நல்லது. வேலையாட்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
மிதுனம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். எதிர்பாராத சிலருடைய அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
சுப காரியங்களில் இருந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழிலில் நவீனத்துவத்தை கையாளுவீர்கள். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேம்படும். வருவாய்கள் தேவைக்கு இருக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம்
புதியவரின் நட்பால் உற்சாகம் உண்டாகும். நுட்பமான சில விஷயங்களை அறிவீர்கள். வர்த்தக தொடர்பான முயற்சிகள் மேம்படும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். வியாபார இழப்புகளை சரி செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். தனவரவுகளில் இருந்த நெருக்கடிகள் மறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கன்னி
எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். வெளியிடங்களில் பொறுமையுடன் செயல்படவும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். நம்பிக்கையானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். பணிகளில் அனுகூலமற்ற சூழல் உண்டாகும். வியாபாரத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
துலாம்
புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். நவீனப் பொருட்களின் சேர்க்கை உண்டாகும். தடைகளை முறியடித்து நினைத்த செயலை முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த தாமதங்கள் மறையும். பிரீதி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
விருச்சிகம்
எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். சுப காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடி வரும். நண்பர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த வங்கி உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
தனுசு
கற்பனை சார்ந்த துறைகளில் புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புது விதமான ஆசைகள் உருவாகும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பூர்வீக சொத்து மூலம் லாபம் கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
மகரம்
வருமான உயர்விற்கான சூழல்கள் அமையும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்கள் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்த சங்கடங்கள் மறையும். பணி விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். தடையாக இருந்தவர்களை வெற்றி கொள்வீர்கள். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கும்பம்
பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அரசு விஷயங்களில் பொறுமை வேண்டும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். தனித்தன்மைகளை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். வியாபார பணிகளில் சிந்தித்து செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
குழந்தைகளின் புதிய முயற்சிகளை ஆதரிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவுகள் ஏற்படும். நேர்மறை சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். பொன் பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இனிமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விசுவாவசு வருடம் ஆடி மாதம் 30 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 15.8.2025.
இன்று அதிகாலை 03.46 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.
இன்று காலை 10.04 வரை அஸ்வினி. பின்னர் பரணி.
இன்று பிற்பகல் 01.04 வரை கண்டம். பின்னர் விருத்தி.
இன்று அதிகாலை 03.46 வரை வனிசை. பின்னர் பிற்பகல் 02.43 வரை பத்தரை. பிறகு பவம்.
இன்று காலை 10.04 வரை அமிர்தா யோகம். பின்னர் சித்த யோகம்.
நல்ல நேரம் :
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
1.சூரியன்
காசியப முனிவரின் குமாரர். ஒளிப்பிழம்பானவர். நவக்ரகங்களில் முதன்மை ஸ்தானம் பெற்றவர். சிம்மராசிக்கு அதிபதி. நவகிரகங்களில் நடுவில் அமர்ந்திருப்பவர்.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - அக்னி
ப்ரத்யதி தேவதை - ருத்திரன்
தலம் - சூரியனார் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்
தானியம் - கோதுமை
மலர் - செந்தாமரை , எருக்கு
வஸ்திரம் - சிவப்பு
ரத்தினம் - மாணிக்கம்
அன்னம் - கோதுமை, ரவா, சர்க்கரைப் பொங்கல்
2.சந்திரன்
பாற்கடலில் தோன்றியவர். தண்ணொளி உடையவர் . வளர்பிறையில் சுபராகவும், தேய்பிறையில் பாபராகவும் விளங்குபவர்.
கடக ராசிக்கு அதிபதி.
திக்கு -தென்கிழக்கு
அதிதேவதை - ஜலம்
ப்ரத்யதி தேவதை - கௌரி
தலம் - திருப்பதி
நிறம் - வெள்ளை
வாகனம் - வெள்ளைக் குதிரை
தானியம் - நெல்
மலர் - வெள்ளை அரளி
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - முத்து
அன்னம் - தயிர் சாதம்.
3 . அங்காரகன் (செவ்வாய்)
இவர் வீரபத்திரர் அம்சம். சுப்ரமணியரை தெய்வமாகக் கொண்ட இவர், பாவ பலனைக் கொடுக்கும் குரூரர்.
மேஷம் , விருச்சிக ராசிகளுக்கு அதிபதி.
திக்கு -தெற்கு
அதிதேவதை - நிலமகள்
ப்ரத்யதி தேவதை - க்ஷேத்திரபாலகர்
தலம் - வைத்தீசுவரன் கோவில்
நிறம் - சிவப்பு
வாகனம் - ஆட்டுக்கிடா
தானியம் - துவரை
மலர் - செண்பகப்பூ, சிவப்பு அரளி
வஸ்திரம் - சிவப்பு ஆடை
ரத்தினம் - பவளம்
அன்னம் - துவரம் பருப்பு பொடி சாதம்.
4. புதன்
இவர் சந்திரனுடைய குமாரர். தீய கிரகங்கள் விளைவிக்கும் பீடைகளை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு.
மிதுனம், கன்னி ராசிகளுக்கு அதிபதி
திக்கு - வட கிழக்கு
அதிதேவதை - விஷ்ணு
ப்ரத்யதி தேவதை - நாராயணன்
தலம் - மதுரை
நிறம் - வெளிர் பச்சை
வாகனம் - குதிரை
தானியம் - பச்சைப் பயறு
மலர் - வெண்காந்தள்
வஸ்திரம் - வெண்ணிற ஆடை
ரத்தினம் - மரகதம்
அன்னம் - பாசிப்பருப்பு பொடி சாதம்.
5. குரு
இவர் தேவ குரு என்னும் பட்டத்தை உடையவர். இவருடைய பார்வையால், தோஷங்கள் அனைத்தும் நீங்கும். பூரண சுபர்.
தனுசு , மீன ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - வடக்கு
அதிதேவதை - பிரம்மா
ப்ரத்யதி தேவதை - இந்திரன்
தலம் - திருச்செந்தூர்
நிறம் - மஞ்சள்
வாகனம் - மீனம்
தானியம் - கடலை
வஸ்திரம் - மஞ்சள் நிற ஆடை
ரத்தினம் - புஷ்பராகம்
அன்னம் - கடலைப் பொடி சாதம் , சுண்டல்.
6. சுக்கிரன்
இவர் அசுர குரு. இவரை மழைக்கோள் என்றும் அழைப்பர். சுபர். ரிஷபம்,
துலாம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - கிழக்கு
அதிதேவதை - இந்திராணி
ப்ரத்யதி தேவதை - இந்திர மருத்துவன்
தலம் - ஸ்ரீரங்கம்
வாகனம் - முதலை
தானியம் - மொச்சை
மலர் - வெண் தாமரை
வஸ்திரம் - வெள்ளாடை
ரத்தினம் - வைரம்
அன்னம் - மொச்சைப் பொடி சாதம் .
7.சனி
இவர் சூரியனுடைய குமாரர். பாவ பலன் தருவதில் ஈசுவர பட்டம் பெற்றவர். சனியைப் போல கெடுப்பாரும் இல்லை, கொடுப்பாரும் இல்லை என்பது பழமொழியாகும்.
மகரம் , கும்பம் ராசிகளுக்கு அதிபதி.
திக்கு - மேற்கு
அதிதேவதை - யமன்
ப்ரத்யதி தேவதை - பிரஜாபதி
தலம் - திருநள்ளாறு
நிறம் - கருமை
வாகனம் - காகம்
தானியம் - எள்
மலர் - கருங்குவளை, வன்னி
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - நீலம்
அன்னம் - எள்ளுப்பொடி சாதம்.
8. ராகு
இவர் அசுரத்தலையும் , நாக உடலும் உடையவர். மிக்க வீரம் உடையவர். கருநாகம் என்று அழைக்கப் படுபவர்.
திக்கு - தென் மேற்கு
அதிதேவதை - பசு
ப்ரத்யதி தேவதை - பாம்பு
தலம் - காளத்தி
நிறம் - கருமை
வாகனம் - நீல சிம்மம்
தானியம் - உளுந்து
மலர் - மந்தாரை
வஸ்திரம் - கருப்பு நிற ஆடை
ரத்தினம் - கோமேதகம்
அன்னம் - உளுத்தம்பருப்புப்பொடி சாதம்.
9. கேது
இவர் நாகத்தலையும் அசுர உடலும் உடையவர். சிகி என்றும் , செந்நாகம் என்றும் அழைக்கப்படுபவர்.
திக்கு - வட மேற்கு
அதிதேவதை - சித்திரகுப்தன்
ப்ரத்யதி தேவதை - பிரமன்
தலம் - காளத்தி
நிறம் - செம்மை
வாகனம் - கழுகு
தானியம் - கொள்ளு
மலர் - செவ்வல்லி
வஸ்திரம் - பல நிற ஆடை
ரத்தினம் - வைடூரியம்
அன்னம் - கொள்ளுப்பொடி சாதம்.
டெல்லி செங்கோட்டையில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் 12-வது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும் 79-வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேச தலைநகரங்கள், மாவட்ட தலைநகரங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள செங்கோட்டையில் இன்று காலை 7.30 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். அவர் தொடர்ச்சியாக 12-வது முறையாக செங்கோட்டையில் தேசிய கொடியேற்ற உள்ளார்.
டொராண்டோ நகர மையத்தில் உள்ள பூங்காக்களில் இடம்பெற்ற மூன்று பாலியல் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த நபர் தொடர்பில் முதலில் இரண்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாகவும் பின்னர் மூன்றாவது சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் கடந்த ஜூலை 11 ஆம் திகதி பிற்பகல், குயின்ஸ் குவே வெஸ்ட் மற்றும் ரீஸ் ஸ்ட்ரீட் பகுதியில் உள்ள எச்.ரீ.ஓ பூங்காவில் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் தன்னை ஓர் கைரேகை ஜோதிடராக அறிமுகம் செய்து பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெண்ணை தனியாக அழைத்துச் சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஐம்பது வயதான பய்சல் முஹமட் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேபோன்ற சம்பவங்கள் கடந்த ஜூலை 31 அன்று கொரோனேஷன் பூங்காவிலும், ஜூன் 27 அன்று டொராண்டோவில் மற்றுமொரு பூங்காவிலும் இதேவிதமான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. சந்தேக நபரினால் வேறும் பலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவ்வாறானவர்கள் பொலிஸாருக்கு தகவல்களை வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல துருக்கியக் கவிஞர் ஒருமுறை தனது ஓவியர் நண்பரிடம் 'மகிழ்ச்சி' என்ற ஓவியத்தை உருவாக்கச் சொன்னார்.
ஒரு குடும்பம் அமைதியாக உறங்கிக் கொண்டிருப்பதை ஓவியமாக ஓவியர் சித்தரித்தார்.
கட்டிலின் ஒரு கால் உடைந்து, இரண்டு செங்கற்களால் தாங்கப்பட்டு, பாழடைந்த அவர்களது வீட்டின் மேற்கூரையில் மழை நீர் ஒழுகிக்கொண்டிருந்தது. ஒரு குடை அந்த மழை நீரை தடுத்துக்கொண்டிருந்தது. அந்த குடும்பத்தின் நாய் கூட படுக்கையில் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது. இந்த ஓவியம் அழியாததாக உலக புகழ் பெற்றதாக மாறியது.
இந்த ஓவியத்தை ஆழமாகப் பார்த்து, உண்மையில் மகிழ்ச்சி என்றால் என்ன என்று சிந்தியுங்கள் நண்பர்களே.....
இந்த படத்தைப் பார்த்த பிறகு, மகிழ்ச்சி என்பது பிரச்சனைகள் இல்லாதது அல்ல, கடினமான சூழ்நிலைகளை ஏற்றுக்கொண்டு அமைதியைக் காண்பது.....
காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள்.
எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும். சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.
அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.
காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்குதான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது.
அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர். ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.
பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக் களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும். 9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.
இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது. நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.
அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம்.
அது மட்டுமல்ல.... ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு. இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கிய சாலிதான்.